நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்த அமலாபால்...

 
Published : Jul 26, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்த அமலாபால்...

சுருக்கம்

amalapaul act nivin pauly pair

உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது  நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும்  அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற  காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . 

'' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் '' என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . 'ஸ்ரீ கோகுலம் மூவீஸ்' சார்பில் திரு. கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'பழசிராஜா' என்ற மிக பிரம்மாண்ட படத்தையும் , கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தின் கதையில் எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் பணியாற்றியுள்ளனர். இந்த மெகா பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல்  வாரம் முதல் துவங்கவுள்ளது. இப்படம் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!