
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமலா பால். தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா ஆகிய படங்கள் அமலா பாலுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அமலா பால், விவகாரத்திற்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார்.
விஷ்ணு விஷாலுடன் அமலா பால் நடித்த ராட்ச்சன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஆடை’ திரைப்படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் அதோ அந்த பறவை போல, கடவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அமலாபால் அடுத்ததாக பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். பாலிவுட்டின் மூத்த இயக்குனர் மகேஷ் பட் இத்தொடரை இயக்கவுள்ளார். அமலா பாலுடன் இணைத்து தாஹிர் ராஜ் பசின், அம்ரிதா பூரி ஆகியோர் நடிக்கின்றனர்.
அந்த வெப் சீரியஸ் குழுவினருடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமலா பால் போதையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் பேண்ட் போடாமல் டி-சர்ட் போன்ற உடையில் அணிந்து அமர்ந்திருக்கும் அமலா பால் போட்டோவை பார்த்து அரை போதையில் பேண்ட் போட மறந்திட்டீங்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.