சூப்பர் ஹீரோயின் அமலாபாலுக்கு உதவும் அனிருத்! 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published : Nov 13, 2019, 12:15 AM IST
சூப்பர் ஹீரோயின் அமலாபாலுக்கு உதவும் அனிருத்! 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுருக்கம்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்துவரும் நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அதோ அந்த பறவை போல'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார்.   

கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக 'அதோ அந்த பறவை போல' உருவாகியுள்ளது. 

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.


இந்தப் படத்தில் இளம் தொழிலதிபராக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளார். அமலாபாலுக்கு நெருக்கமானவராக பாலிவுட் நடிகர் சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்.


'அதோ அந்த பறவை போல' படத்திற்காக அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது மற்றும் பல்வேறு சாகச சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இந்தப் படம், தற்போது ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. அதோ அந்த பறவை போல படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிட்டார். 


கடைசியாக, அமலாபால் நடித்த ஆடை படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்தப் படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்திருந்ததுதான். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சந்தித்தது. அதேபோல் 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசரும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!