சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்த அகில உலக சூப்பர் ஸ்டார்! பொங்கலை மகிழ்விக்க வருகிறது சிவாவின் 'சுமோ'...!

Published : Nov 13, 2019, 12:00 AM IST
சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்த அகில உலக சூப்பர் ஸ்டார்! பொங்கலை மகிழ்விக்க வருகிறது சிவாவின் 'சுமோ'...!

சுருக்கம்

 'தமிழ்ப்படம்-2' படத்தின் கலக்கலான வெற்றிக்குப் பிறகு, 'அகில உலக சூப்பர் ஸ்டார்' சிவா, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' படத்தில் நடித்தார். இந்தப் படம், ஏதோ காரணங்களால் ரிலீசாகாமல் உள்ளது. இதனையடுத்து, சிவா நடிப்பில் உருவாகிவரும் படம் 'சுமோ'. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.   

வணக்கம் சென்னை' படத்திற்குப் பிறகு சிவாவுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார் என்பது ஹைலைட். 

பிப்ரவரி-14, ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய ஹோசிமின் இந்தப் படத்தை இயக்குகிறார். சுமோ விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ராஜிவ்மேனன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.


 
'எல்.கே.ஜி'., 'கோமாளி' உள்ளிட்ட படங்களை தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்தான், 'சுமோ' படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஜப்பானில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பின்னர், படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

இந்நிலையில், சிவாவின் 'சுமோ' படம் பொங்கல் வெளியீடாக திரைக்குவரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இன்ப அதிர்ச்சியளித்துள்ளது.
ஏனென்றால், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் தர்பார் படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது, அந்தப் படத்துடன், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' சிவாவின் 'சுமோ' படம் மோதவிருப்பது ரசிகர்களை திகைப்படைய செய்துள்ளது. இதனையடுத்து, பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது சூப்பர் ஸ்டாரா? அல்லது அகில உலக சூப்பர் ஸ்டாரா? என்கிற அளவுக்கு இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?