
தன்மீது அபாண்டமாக பாலியல் குற்றம் சாட்டியுள்ள லீனா மீது வழக்குப் போட்டுள்ள சுசி கணேசன் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல. அவரது படத்தில் நடித்தவள் என்கிற முறையில் சொல்கிறேன். பெண்கள் விஷயத்தில் மிகவும் தவறானவர் சுசி கணேசன்’ என்கிறார் அவரது ‘திருட்டுப்பயலே2’ படத்தின் நாயகி அமலாபால்.
இயக்குநர் சுசிகணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத்தெரியாத அந்த மனிதரிடம் உதவி இயக்குநரான லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.
நான் அவர் இயக்கிய ‘திருட்டுப்பயலே2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், எப்போதும் இரட்டை அர்த்தம் தொனிக்க பேசும் அவரது பேச்சுக்களாலும், முகம் தெரியாத யாரிடமோ அவர் பேசிய பேச்சுக்களை வைத்து அவர் எவ்வளவு தவறானவர் என்பதைப் புரிந்துகொண்டேன். அதுவுமின்றி படப்பிடிப்புத்தளங்களில் தேவையில்லாமல் என்னை உரசியபடியே நின்றுகொண்டிருப்பார்.
எனவே அவரது சித்திரவதைகளை அனுபவித்தவள் என்கிறமுறையில் இந்த நேரத்தில் லீனா மணிமேகலையை நான் ஆதரிக்கிறேன்’ என்கிறார் அமலாபால்.
லீனாவின் குற்றச்சாட்டுக்கு உடனே பதில் சொல்லி ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்ட சுசி, தன்னைத் திருட்டுப்பயலேதான் என கன்ஃபர்ம் பண்ணும் அமலா விவகாரத்தில் என்ன செய்யப்போகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.