
கன்னட நடிகர் துனியா விஜய்யின் மகள் தன்னை தாக்கியதாக அப்பா மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மனைவி நாகரத்தினாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒருவரான மகள் மோனிகா அப்பா விஜய், தன்னை தாக்கியதாக மோனிகா கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், தன்னுடைய ஆடை மற்றும் சில பொருட்கள் எடுக்க அப்பா விஜய் வீட்டிற்கு சென்ற போது,. அவருடைய இரண்டாவது மனைவி மற்றும் பிள்ளைகள், அப்பா மூவரும் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்
பெற்ற மகளையே நடிகர் துனியா விஜய் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் மோனிகாவிற்கு அப்பா விஜய், தலையை பிடித்து சுவரில் இடித்து அடிப்பட்டு ரத்தம் வந்துள்ளது. தற்போது மோனிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மோனிகா அளித்த புகாரின் அடிப்படையில் துனியா விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் துனியா விஜய் மீது கடந்த மாதம் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.