
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவர் விளம்பரம் ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதாக எழுதப்பட்டிருந்தது. அது அரசியலுக்கான பிரவேசம் இல்லை என்றும், ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கும் படத்தின் விளம்பரம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல வானொலியின் மூலம் ஆர்.ஜே.வாக அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.ஜே.பாலாஜி. தற்போது, பல படங்களில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். சமீப காலாமாக நடிப்பையும் தாண்டி, சமூக பணிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வெள்ளக்காடானபோது, முதல் ஆளாக ஒரு கோடி பணம் கொடுத்து உதவினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்து வரும் உதவியால் இவரை நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. காவிரிக்காக நடந்த போராட்டத்தின்போது கூட ஐபிஎல் விளையாட்டை தொகுத்து வழங்குவதை தவிர்த்து விட்டார்.
மே 18 ஆம் தேதி அன்று ஆர்.ஜே.பாலாஜி என்ன அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரீமேக் படம் ஒன்றில் அரசியல்வாதியாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்க உள்ளதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புதான் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.