மாதவனை மன்னிக்க மாட்டேன் .....!!! கெளதம் மேனன் ஓபன் டாக்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
மாதவனை மன்னிக்க மாட்டேன் .....!!! கெளதம் மேனன் ஓபன் டாக்.....!!!

சுருக்கம்

இயக்குனர் கெளதம் மேனன் முதன்முதலாக தமிழில் இயக்கிய திரைப்படம் “மின்னலே”.இந்த திரைப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு மாதவன் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த 'அலைபாயுதே 'படத்தில்  அறிமுகமாகியிருந்தார். அலைபாயுதே படம் சூப்பர் ஹிட்டானதால்,மாதவனுக்கு பல தமிழ்ப்பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியது.

இந்நிலையில் மாதவனிடம் தனது மின்னலே கதையை கெளதம் மேனன் கூறியுள்ளார்.இதற்கு  முதலில் தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்னத்திடம் இந்த கதையை கூறுமாறும்,அவருக்கு பிடித்திருந்தால் இந்த படத்தில் நடிப்பதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மணிரத்னத்திடம் கெளதம் மேனன் ,தனது மின்னலே கதையை கூறினாராம்.

இந்த சம்பவத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ள  கெளதம் மேனன்,”என்னை மணிரத்னத்திடம் கதை சொல்ல வைத்து தர்மசங்கடத்தில் சிக்க வைத்த மாதவனை என்றைக்குமே நான் மன்னிக்க மாட்டேன்.” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும் “மணி சார் என்னுடைய கதைக்கு ஓகே சொல்கிறாரா,இல்லையா என்பதை விட அவரிடம் கதை சொல்லப் போவதை நினைத்துதான் பதட்டமாக இருந்தது என்றும்.

அந்த நாள் என்னால் மறக்க முடியாத ஒன்று என்றும் .எனக்கு முன்மாதிரியாக இருந்த மணி சாரிடம் ஒரு ’சப்ப’ கதையை கூறப் போவதை பற்றிதான் என் மனது யோசித்துக் கொண்டிருந்தது என கூறிய கெளதம் மேனன்.

 கிட்ட தட்ட  ஒரு மணி நேரம் அவருக்கு மின்னலே படத்தின் கதையை கூறியதாகவும். அவரை என் கதை மூலம் கவர வேண்டும் என தான்  முயற்சித்தது,எனக்கு மேலும் பதட்டத்தை அதிகரித்தது என தெரிவித்தார்.

இதற்காகவே மாதவனை நான் மன்னிக்க மாட்டேன்.”என கெளதம் மேனன் ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

ஆனால் கெளதம் மேனன் கூறிய மின்னலே கதை மணிரத்னத்திற்கு பிடிக்கவில்லை என்பதும் .அதன் பிறகு எப்படியோ மாதவன் அந்த படத்தில் நடித்து,அந்த படம் சூப்பர் ஹிட்டாகவும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!