குழந்தை போட்டோவை வெளியிட்ட ராஜா, ராணி சீரியல் ஜோடி...அச்சு அசலாக அம்மா ஆல்யா போலவே இருக்கும் குட்டி பப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 01, 2020, 11:16 AM IST
குழந்தை போட்டோவை வெளியிட்ட ராஜா, ராணி  சீரியல் ஜோடி...அச்சு அசலாக அம்மா ஆல்யா போலவே இருக்கும் குட்டி பப்பு...!

சுருக்கம்

இதுவரை குழந்தை ஐலா சையத் போட்டோவை பகிராமல் இருந்து வந்த ஆல்யா மானசா, சஞ்சீவ் தம்பதி குழந்தை முழு போட்டோவை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவும், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர். இந்த சீரியலில் காதலர்களாக நடித்த ஆல்யா மானசா, சஞ்சீவ்விற்கு இடையே நிஜத்திலும் காதல் பற்றிக்கொண்டது. மற்றவர்களை போல் இல்லாமல் இந்த இளம் ஜோடி தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. ஆல்யா மானசா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார். இதனால் சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான ஆல்யா மானசா தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு வந்த ஆல்யா மானசாவின் பிறந்தநாளை சஞ்சீவ் சர்ப்பிரைஸ் கொடுத்து சூப்பராக கொண்டாடினார். மின் விளக்குகள் கணவர் சஞ்சீவ் மற்றும் கைக்குழந்தையுடன் ஆல்யா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

இதுவரை குழந்தை ஐலா சையத் போட்டோவை பகிராமல் இருந்து வந்த ஆல்யா மானசா, சஞ்சீவ் தம்பதி குழந்தை முழு போட்டோவை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி குழந்தையுடன் இருப்பது போன்ற  புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார். தற்போது காருக்குள் அமர்ந்திரும் சஞ்சீவ் கையில் தனது மகளை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பார்க்க அச்சு அசலாக ஆல்யா மானசாவை போலவே இருக்கும் ஐலாவின் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ