செம்ம ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய காமெடி நடிகர் செந்தில்...இளம் பெண்ணுடன் செய்த அசத்தல் டிக்-டாக்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 01, 2020, 10:05 AM IST
செம்ம ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய காமெடி நடிகர் செந்தில்...இளம் பெண்ணுடன்  செய்த அசத்தல் டிக்-டாக்...!

சுருக்கம்

இந்நிலையில் காமெடி நடிகர்  நீண்ட தாடி வைத்து செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றவர் செந்தில். கவுண்டமணி - செந்தில் காம்பினேஷனில் வெளியான காமெடிகளை 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் யாரும் இன்றளவும் மறந்திருக்க முடியாது. கவுண்டமணியிடம் புதுசு, புதுசாக சந்தேகம் கேட்டு அடி வாங்கும் செந்தில் காமெடியை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.  

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நகைச்சுவை நடிகர் செந்தில். கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருந்த செந்தில், 2018-ம் ஆண்டு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். மேலும் ராசாத்தி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள செந்தில் ட்விட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. அதை உண்மை என நம்பி சில மணி நேரங்களிலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்ற தொடங்கினர். இதையடுத்து வீடியோ ஒன்றை வெளிட்ட செந்தில் எனக்கு ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த அறிக்கை போலியானது என்று விளக்கம் அளித்தார். 

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

இந்நிலையில் காமெடி நடிகர்  நீண்ட தாடி வைத்து செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 1980களில்  கரகாட்டகாரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி மிகவும் பிரபலமானது. இன்று அந்த காமெடியை டிவியில் பார்த்தாலும் சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகும். அந்த சூப்பர் காமெடிக்கு இளம் பெண் ஒருவர் டிக்-டாக் செய்கிறார். அதை காமெடி நடிகர் செந்தில் கண்டு ரசிப்பது போன்ற வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ஆளே அடையாளம் தெரியாத படி ஸ்மார்ட் லுக்கிற்கு மாறியுள்ள காமெடி நடிகர் செந்தில் வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!