ஒட்டுமொத்த சட்டை பட்டனைகளை கழட்டிவிட்டு... கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2020, 7:14 PM IST
Highlights

பட வாய்ப்பிற்காக படுகிளாமர் கிளிக்ஸை தட்டிவிடும் பூனம் பாஜ்வாவை பார்த்து கலாய்த்தும், பாராட்டும் பல கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் குவிந்து வருகிறது. 

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்
முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை. 

இதையும் படிங்க: 

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார். 

இதையும் படிங்க: 

பார்த்தாலே கண்கள் கூசும் அளவிற்கு படு கிளாமரான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் வெள்ளை நிற சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுக்கை அறையில் பூனம் பாஜ்வா நடத்திய ஹாட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்தது. நீச்சல் குளத்தில் பிகினியில் ஆட்டம் போட்ட போட்டோ என கவர்ச்சி கன்னி கிரணையே ஓரங்கட்டும் அளவிற்கு அட்ராசிட்டி செய்து வருகிறார். 

இதையும் படிங்க: 

இந்நிலையில் தற்போது தனது மேலாடை பட்டன்கள் அனைத்தையும் திறந்துவிட்டு, உள்ளாடை தெரியும் படியாக படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். பட வாய்ப்பிற்காக படுகிளாமர் கிளிக்ஸை தட்டிவிடும் பூனம் பாஜ்வாவை பார்த்து கலாய்த்தும், பாராட்டும் பல கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் குவிந்து வருகிறது. என்ன வந்து என்ன செய்ய பட வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற கவலையில் உள்ளார் பூனம் பாஜ்வா.

 

click me!