Alya Manasa: சஞ்சீவ்-ஆல்யா தம்பதிக்கு மகன் பிறந்த கையோடு, அடுத்தடுத்து கிடைத்த பரிசை ரசிகர்களுக்கு காட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சஞ்சீவ்-ஆல்யா தம்பதிக்கு மகன் பிறந்த கையோடு, அடுத்தடுத்து கிடைத்த பரிசை ரசிகர்களுக்கு காட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் ஜோடியாக இருப்பவர்கள் ஆல்யா - சஞ்சீவ் ஜோடியாகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார்.
ராஜா ராணி 2 என்ற சீரியல்:
ஆல்யா மானசா கர்ப்பமாக இருக்கும் போதும், ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தார். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோதும், நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை நடித்துள்ளார்.
சஞ்சீவ்-ஆல்யா மகன்:
கடந்த மார்ச் 27ம் தேதி தங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார். குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆல்யா இப்போது தான் நடித்து வந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து சுத்தமாக வெளியேறிவிட்டார். இதையடுத்து, 'இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக' கூறிவிட்டார்.
டபுள் ஜாக்பார்ட்:
சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் நாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில், இவருக்கு சன் குடும்ப விருதுகளில், சிறந்த நயாகனுக்காக விருது கிடைத்து. இந்நிலையில், ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் யூடியூப் வைத்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதையடுத்து தற்போது, அவர்களுக்கு கோல்ட் ஷீல்ட் பரிசாக கிடைத்துள்ளது.
மகன் பிறந்த கையோடு அவர்களுக்கு இந்த ஷீல்ட் கிடைத்திருப்பது பெறும் மகிழ்ச்சி என்கின்றனர். அதனை பரிசை அவர்கள் ரசிகர்களுக்கு காட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.