'புஷ்பா 2' ரீலோடட் ரிலீஸ் தேதி மாற்றம்!

By manimegalai a  |  First Published Jan 8, 2025, 9:05 PM IST

புஷ்பா 2 படத்தின் 20 நிமிடம் நீடிக்கப்பட்ட ரீலோடட் பாதிப்பு தாமதமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்திய சினிமாவின் இரண்டாவது மிகப்பெரிய வெற்றிப் படமாக புஷ்பா 2 திகழ்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப் பான்-இந்தியா திரைப்படம் உலகளவில் 1831 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. புஷ்பா ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு தகவலை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர். புஷ்பா 2-ன் நீட்டிக்கப்பட்ட பதிப்பு 'புஷ்பா 2 ரீலோடட்' என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதே அந்தத் தகவல். புதிய பதிப்பின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியீட்டு தேதியில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான 'புஷ்பா 2' முதல் பாகத்துடன் 20 நிமிட கூடுதல் காட்சிகளுடன் இணைக்கப்பட்டு ரீலோடட் பதிப்பு வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதோடு, இதன் வெளியீட்டு தேதி ஜனவரி 11 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் புதிய பதிப்பு 11 ஆம் தேதி வெளியாகாது என்றும், அதற்கு பதிலாக 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர்கள் புதிதாக அறிவித்துள்ளனர்.

அஜித்துக்கு போட்டியா? சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ்க்கு நாள் குறித்த படக்குழு!

தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான வெளியீட்டு சீசன்களில் ஒன்று பொங்கல். இந்த ஆண்டு பொங்கல் வெளியீடுகள் 10 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மிக முக்கியமான படமான 'கேம் சேஞ்சர்' 10 ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து புஷ்பா 2 ரீலோடட் வெளியாகும் என்ற உற்சாகத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இருந்தனர். 5 நாட்கள் தாமதமாகி இருந்தாலும், புஷ்பா 2 புதிய பதிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

 

click me!