
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஓடிடி தளங்கள் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் முடங்கிக் கிடந்த படங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல் தரும் விஷயமாக அமைந்தது ஓடிடிதான். லாக்டவுனுக்கு பிறகு தான் அதிக அளவில் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நடைமுறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
தமிழில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, ஹாட்ஸ்டார், சோனி லிவ், சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு ஓடிடி தளம் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ‘ஆஹா’ ஓடிடி தளம் தற்போது தமிழில் அறிமுகமாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி ஓடிடி தளமாக இருக்கும் ஆஹா, தற்போது தமிழிலும் அதன் கிளையை திறந்துள்ளது.
இந்த தளம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், வெப்தொடர்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சில படங்களின் ஓடிடி உரிமையையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது இந்நிறுவனம் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சர்தார் படத்தின் ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்தார் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர். மேலும் நடிகை சிம்ரன் வயதான கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், திலீப் சுப்புராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.