பிகில் சிறப்பு காட்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி..! எல்லாம் சுபமாக முடிந்ததன் பரபரப்பு பின்னணி..!

By vinoth kumarFirst Published Oct 25, 2019, 10:13 AM IST
Highlights

இந்த தீபாவளிக்கு நடிகர் விஜயின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்த இரண்டு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் நேற்று இரவு திடீரென சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து பிகில், கைதி இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக வெளியானது.

பிகில் சிறப்புக் காட்சிக்கு திடீரென கடைசி நேரத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியதன் பின்னணி வெளியாகியுள்ளது.

இந்த தீபாவளிக்கு நடிகர் விஜயின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்த இரண்டு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் நேற்று இரவு திடீரென சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து பிகில், கைதி இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக வெளியானது.

பிகில் படத்திற்கு சிறப்புக் காட்சி கிடையாது என தமிழக அரசு எடுத்த திடீர் முடிவுக்கு காரணம் அவர் பேசும் அரசியல் மற்றும் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து படங்களில் காட்சிகள் வைப்பது தான். ஓயாமல் சீண்டிக் கொண்டிருக்கும் விஜயை இந்த முறை நாம் சீண்டலாம் என அதிமுக முடிவெடுத்தே பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்தது. ஆனால் பிகில் – அதிமுக மோதலில் சிக்கிக் கொண்டு சின்னபின்னமானது கார்த்தியின் கைதி படமும் தான்.

பிகிலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கைதிக்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாத நிலை இருந்தது. இதனால் அதிர்ந்து போன எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பு சங்க நிர்வாக குழுவினர் மூலம் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பேசியுள்ளார். ஆனால் வெளிப்படையாகவே பிகில் பட விவகாரத்தை அமைச்சர் தரப்பு கூறியதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து பிகில் தயாரிப்பாளர் சார்பாக தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

இதில் சில பல விட்டமின் ப விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு அதுவும் தயாரிப்பாளர் தலையில் கட்டப்பட்டது. இதன் பிறகே படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜயின் சர்ச்சை பேச்சால் தயாரிப்பாளருக்கு தான் வீண் செலவு என்று பேசிக் கொள்கிறார்கள்.

click me!