பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒட்டு மொத்த போட்டியாளர்களும், விசித்ரா மற்றும் அர்ச்சனாவை டார்கெட் செய்து தாக்கிய நிலையில், விசித்ரா ஆவேசமாக பேசும் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அனல் பறக்கும் சண்டை - சச்சரவுக்கு மத்தியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடந்த 6 சீசன்களிலும், 40 வயதை தாண்டிய போட்டியாளர்கள் இருந்தால், முதலில் வெளியேற்றும் மக்கள், இந்த முறை 50 வயது போட்டியாளரான நடிகை விசித்ராவின் விளையாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல், மிகவும் டீசெண்டாக இவர் கொடுக்கும் கன்டென்ட் மக்களை கவர்ந்துள்ளதை தாண்டி, இவருக்கான ரசிகர்கள் கூட்டத்தையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் பிரபலங்கள் பட்டியலில் விசித்ரா முதல் இடத்தை பிடித்தார். கடந்த ஒரு மாதமாக, தன்னை மரியாதை குறைவாக போட்டியாளர்கள் எது செய்தாலும் பொறுத்துக்கொண்டு விச்சு, இந்த வாரம் பொங்கி எழுந்தார்.
Thalapathy Vijay Library: அரசியலுக்கு அடித்தளம்! பல இடங்களில் துவங்கப்படும் 'தளபதி விஜய் நூலகம்'!
தனக்கு தன் மானம் மிகவும் முக்கியம், இது வெளியே தவறான உதாரணமாக சென்று விட கூடாது. எனவே இனி என்னை விசித்ரா மேடம் என கூப்பிடுங்கள் என மற்ற போட்டியாளர்களுக்கு ஆர்டர் போட்ட இவர், போட்டியாளர்கள் கண்டுகொள்ளாத பட்சத்தில், நான் மைக்கை கழட்டி கொடுத்துவிட்டு சென்று விடுவேன் என தெரிவித்தார். இவருக்கு எதிராக பல போட்டியாளர்கள் கிண்டல் அடித்தாலும், அர்ச்சனா தன்னுடைய முழு ஆதரவையும் இவருக்கு கொடுத்து வருகிறார். அதே போல், தனக்கென ஒரு பிரச்சனை வந்த போது, இவர் ஒருவர் தான் தனக்கென நின்றதாக அவருக்கு லட்டுவை பரிசாக கொடுத்தார் அர்ச்சனா.
கடந்த இரண்டு நாட்களாக கண்ணீரும் கவலையுமாக இருந்த விச்சுவை பிக்பாஸ் நேற்று சமாதானம் செய்த நிலையில், இன்றைய தினம், பிக்பாஸ் இந்த வாரம் இரண்டு போரிங் கண்டெஸ்டன்டை தேர்வு செய்து கூறுமாறு தெரிவிக்கிறார். தினேஷ், பூர்ணிமா, கானா பாலா உள்ளிட்ட பலர் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தான் சொல்கிறார்கள். டார்கெட் செய்து தன்னையும் அர்ச்சனாவையும் போட்டியாளர்கள் இப்படி சொல்வதை புரிந்து கொண்ட விசித்ரா, இனிமேல் தான் விசித்ரா பார்ட் 2-வை பார்க்க போறீங்க என சொல்கிறார். இந்த புரோமோ நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.