கியூட்டான புகைப்படத்துடன் தனது குழந்தையின் பெயரை அறிவித்துள்ள நடிகை ஆலியா பட், அதற்கான அர்த்தங்களையும் லிஸ்ட் போட்டு கூறி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். அவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை ஆலியா பட்டிற்கு கடந்த நவம்பர் 6-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தனது குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை முதன்முறையாக அறிவித்துள்ளார் நடிகை ஆலியா பட். அதன்படி அவருக்கு ராஹா என பெயரிடப்பட்டு உள்ளதாக ஆலியா தனது இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார். இந்த பெயரை அவரது மாமியாரும், தனது கணவர் ரன்பீர் கபூரும் தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூரின் குடும்ப வழக்கப்படி ஆர் என்கிற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தான் வைக்கப்படும். தற்போது அதே நடைமுறையை அவர்கள் பின்பற்றி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மகள் பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2-வது குழந்தை... மீண்டும் தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நரேன்
அதுமட்டுமின்றி ராஹா என்கிற பெயருக்கு உள்ள அர்த்தங்களையும் லிஸ்ட் போட்டு கூறியுள்ளார் ஆலியா. அதன்படி பொதுவாகா ராஹா என்றால் தெய்வீக பாதை என்பது பொருள். அதுவே சுவஹாலி மொழியில் மகிழ்ச்சி என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் ராஹா என்பது ஒரு குலத்தை குறிக்கும். பெங்காலி மொழியில் ஓய்வு, நிவாரணம், ஆறுதல் என பல அர்த்தங்கள் உள்ளன.
அரபு மொழியில் அதற்கு அமைதி, ஆனந்தம், பேரின்பம் மற்றும் சுதந்திரம் என பல அர்த்தங்கள் இருக்கின்றன. இந்த அனைத்து அர்த்தங்களும் அவளுக்கு பொருந்தும் என்பதை அவளை கையில் ஏந்திய முதல் கணத்திலேயே நாங்கள் உணர்ந்தோம். எங்கள் குடும்பத்தை உயிர்பித்ததற்கும், எங்கள் வாழ்க்கை தற்போது தான் தொடங்கி உள்ளதுபோல் உணர வைத்ததற்கு நன்றி ராஹா என மகளை பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ஆலியா.
இதையும் படியுங்கள்... மருமகளாக நயன்தாரா எப்படி?... முதன்முறையாக நயன் பற்றி மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவனின் தாயார்