
'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய தரமான படங்களில் இவர், துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
'ஆலம்பனா' படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.
மேலும், பாண்டியராஜன், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்தப்படத்துக்கு, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்றுள்ள குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், இப்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரியும் ஃபேன்டஸி படமாக தயாராகும் 'ஆலம்பனா' படத்தை, மிகப்பெரிய பட்ஜெட்டில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதுவரை வைபவ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் இதுதான்.கடந்த மாதம் 'ஆலம்பனா' படத்தின் டைட்டில் லுக் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற விழாவில், வைபவ், பார்வதிநாயர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட்டை 'இன்று நேற்று நாளை' புகழ் இயக்குநர் ரவிக்குமார் படம்பிடித்து தொடங்கிவைத்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ள 'ஹீரோ' படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'டாக்டர்' மற்றும் சந்தானத்தின் 'டிக்கிலோனா' ஆகிய படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது, வைபவ்வின் 'ஆலம்பனா' படத்தின் மூலம் தனது அடுத்த ஆட்டத்தையும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.