அமலா பால் - ஏ.எல்.விஜய் விவாகரத்துக்கு காரணம் நடிகர் தனுஷ்! உண்மையை உடைத்து பேசிய ஏ.எல்.அழகப்பன்!

By manimegalai aFirst Published Feb 1, 2020, 2:59 PM IST
Highlights

நடிகை அமலாபால் - இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன். 
 

நடிகை அமலாபால் - இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன். 

தல அஜித் நடித்த 'கிரீடம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை தொடர்ந்து, மதரசாபட்டினம், தெய்வதிருமகள், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் தன்னுடைய பெயரை நிலை நிறுத்தி கொண்டவர்.

இயக்குனர் விஜய் தெய்வதிருமகள் படத்தை இயக்கியபோது, அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பாலுக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் தங்களுடைய காதலை வீட்டில் கூறி, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஆனால் இதுவரை இவர்கள் இருவரும், தங்களுடைய விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை. இந்நிலையில் முதல் முறையாக, ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திருமணத்திற்கு பின் நடிகை அமலா பால் நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தார். அவரை தனுஷ் அவருடைய  தயாரிப்பில் உருவான 'அம்மா கணக்கு' படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் நடிக்க துவங்கிய பின்பு தான் விஜய் - அமலாபால் இடையே பிரச்சனைகள் வர துவங்கியது என குற்றம் சாட்டியுள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த  படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் அமலா பால் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பின் அமலா பால் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் அமலாவை விவாகரத்து செய்த பின், கடந்த ஆண்டு ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து 'தலைவி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!