
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், என தமிழ் திரையுலகில் பல்வேறு திறமைகளோடு விளங்கும், இயக்குனர் நவீன் தற்போது 'அக்னி சிறகுகள்' என்ற படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்ஷர ஹாசன், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பா நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அ'க்னி சிறகுகள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும், இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனியின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியானது. சீனு என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் இருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்றையதினமே அக்ஷரா ஹாசன் கதாபாத்திரத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷர ஹாசன் நீளமான முடியோடு இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கெட்டப்பில் இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.