எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் ரோகாந்த் இயக்கிவரும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்படத்தில் முதலில் அமலா பால் கமிட் பண்ணப்பட்டு ’ஆடை’ பட சர்ச்சையால் தூக்கியடிக்கப்பட்டு பின்னர் மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஊட்டியில் தொடர்ந்து நடந்து வரும் இப்படத்தில் சில தினங்களுக்கு காமெடி நடிகர் விவேக் இணைந்தார்.
படங்களில் நடிக்காத டைரக்டர்கள் யாராவது இன்னும் மிச்சம் இருக்கிறார்களா என்று கேட்கிற அளவுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள அத்தனை டைரக்டர்களும் பார்ட் டைம் நடிகர்களாக மாறிவரும் நிலையில் இயக்குநர் ’ஜெயம்’மோகன் ராஜாவும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்தில் அவர் முதல் முறையாக அரிதாரம் பூசுகிறார்.
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் ரோகாந்த் இயக்கிவரும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்படத்தில் முதலில் அமலா பால் கமிட் பண்ணப்பட்டு ’ஆடை’ பட சர்ச்சையால் தூக்கியடிக்கப்பட்டு பின்னர் மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஊட்டியில் தொடர்ந்து நடந்து வரும் இப்படத்தில் சில தினங்களுக்கு காமெடி நடிகர் விவேக் இணைந்தார்.
பின்னர் அடுத்த சில தினங்களில் முக்கிய வில்லன் வேடத்தில் ‘தடம்’பட இயக்குநர் மகிழ் திருமேனி நடிப்பதாக அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தனர். அந்த சர்ப்ரைஸின் தொடர்ச்சியாக இன்று சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரும் இயக்குநருமான மோகன் ராஜாவும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் ராஜாவின் மகன், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவரும் நிலையில் தற்போது ஒரே குடும்பத்தில் மூன்று நடிகர்கள் உள்ளனர்.