
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல பிரதேசத்துக்கு தனது நண்பர்களுடன் கடந்த மாதம் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கடந்த பிப்ரவரி 4-ந் தேதி சென்னைக்கு காரில் கிளம்பிய அவர், வரும் வழியில் கசாங் நாளா என்கிற பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். இதில் கார் நிலை தடுமாறி சட்லெஜ் நதியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வெற்றியின் நண்பர் கோபிநாத் பலத்த காய்த்துடன் உயிர் தப்பினார். ஆனால் வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரை தேடும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 8 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் நேற்று வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... வெற்றி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! மகன் உடலை மீட்டவர்களுக்கு சொன்னபடி ஒரு கோடி சன்மானம்..!
நீருக்கடியில் பாறையின் இடுக்கில் சிக்கி இருந்த வெற்றி துரைசாமியின் உடலை நீச்சல் வீரர் ஒருவர் கண்டுபிடித்து மீட்டு வந்தார். இதையடுத்து இன்று சென்னை கொண்டுவரப்பட்ட வெற்றி துரைசாமியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்தும் வெற்றி துரைசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
வெற்றி துரைசாமி அஜித்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் ஒன்றாக பயணித்தும் உள்ளனர். நண்பனை பிரிந்த சோகத்தில் கண்ணீர் மல்க வந்து நடிகர் அஜித் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்று மாலை 6 மணிக்கு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது வெற்றி உடல்.. பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு- எப்போது அடக்கம்.? வெளியான தகவல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.