ரிப்பீட் மோடில்... ரசிகர்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் இந்த காதல் பாடல்கள் திபு நினன் தாமஸின் பாடல்களா?

Published : Feb 13, 2024, 01:59 PM IST
ரிப்பீட் மோடில்... ரசிகர்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் இந்த காதல் பாடல்கள்  திபு நினன் தாமஸின் பாடல்களா?

சுருக்கம்

குறுகிய காலத்தில் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள,  திபு நினன் தாமஸ் பற்றியும் அவரின் காதல் பாடல்கள் பற்றியும் பார்க்கலாம் வாங்க.  

திபுவின் மெல்லிசைப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாது ரசிகர்கள் மனதிலும் மறக்க முடியாத ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெயின்ஸ்ட்ரீம் திரைப்பட இசைத்துறைக்குள் அவர் நுழைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளது. 'மரகத நாணயம்' படத்தின் 'நீ கவிதைகளா' பாடல் முதல், ’சித்தா’ படத்தின் சமீபத்திய சூப்பர்ஹிட் பாடலான 'கண்கள் ஏதோ' வரை இசை ஆர்வலர்கள் அவரது மெல்லிசையால் உடனடியாக ஈர்க்கப்பட்டனர். ’நீ கவிதைகளா’ பாடல் 2017 இல் வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்து இருந்தாலும் ஸ்பாட்டிஃபையின் முதல் 10 தரவரிசைகளில் இப்போதும் உள்ளது. 

பாலிவுட் படத்தில் முன்னணி ஹீரோவின் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! ஜப்பானில் நடக்கும் படப்பிடிப்பு போட்டோஸ்!

குறுகிய காலத்தில் இசைத்துறையில் அவர் அற்புதமான சாதனைகளை செய்துள்ளார் என்பது அவரது டிஸ்கோகிரஃபி பார்க்கும்போதே புரியும். ‘கனா’ படத்தின் ஆல்பம் இவரை ஒரே இரவில் இன்னும் பிரபலமாக்கியது. இந்தப் படத்தின் மொத்த ஆல்பமும் 'வாயாடி பெத்த புள்ள' மற்றும் 'ஒத்தையடி பாதையில்' பாடல்கள் மூலம் 800+ மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், யூடியூப் தளத்தில் 450+ மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதேபோல, ‘பேச்சுலர்’ படத்திலிருந்து இவரது ‘அடியே’ பாடலும் இளைஞர்கள் மத்தியில் சாட்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை எட்டிய முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை இந்தப் பாடல் வைத்துள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் இவ்வளவு அதிக பார்வையாளர்களை அடைந்த முதல் தென்னிந்திய இசையமைப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Priyanka Mohan Net Worth: நடிச்சது 5 தமிழ் படங்கள் தான்! கோடிகளில் சொத்து சேர்த்துள்ள நடிகை பிரியங்கா மோகன்!

டிஜிட்டல் மற்றும் மியூசிக் பிளாட்ஃபார்ம்களில் இந்த சாதனைகளைப் படைத்தது மட்டுமல்லாது, இந்தப் பாடல் 100K+ ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸாகவும் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவரது பாடல்கள் பல பிராந்தியங்களைத் தாண்டி பலரது இதயங்களை வென்றது. திபுவின் பாடல்கள் இசைப்பிரியர்களுக்கு மட்டுமல்லாது, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது சமீபத்திய படைப்பான 'சித்தா'வில் இருந்து 'கண்கள் ஏதோ’ பாடல் தமிழ் மொழி அல்லாதவர்களையும் கூட தாளம் போட வைத்து அவர்களின் இசைப்பட்டியலில் சேர்க்க வைத்தது. 

சந்தேகத்திற்கு இடமின்றி, திபு நினன் தாமஸின் இசை ரசிகர்களிடம் லூப் மோடில் கேட்க வைத்து மயக்குகிறது. அவர் இப்போது மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர். எக்ஸ்’ படம், ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐந்து மொழிகளில் 3டியில் வெளியாகும் பான்-இந்தியப் படமான ’அஜயந்தே ரெண்டம் மோஷனம்’ (ARM) மற்றும் இன்னும் நான்கு தமிழ்ப் படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?