Video: துபாயிலும் விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர்கள்.. கோபத்தில் டக்குனு போனை பிடுங்கி டெலிட் செய்த அஜித்

By Ganesh A  |  First Published Jan 4, 2024, 2:06 PM IST

துபாயில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித், தன்னுடைய ரசிகரின் போனை பிடுங்கி வீடியோவை டெலிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அஜித்தின் குடும்பத்தினர் துபாய் சென்றிருந்தனர். அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அஜித் ஜாலியாக படகில் சென்ற வீடியோவும் வெளியாகி வைரலானது.

இதையடுத்து துபாயில் ரசிகை ஒருவருடன் புத்தாண்டு பார்ட்டியில் நடிகர் அஜித் ஆட்டம் போட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. இப்படி அஜித் எங்கு சென்றாலும் அவரை வீடியோ எடுத்து பதிவிடப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள வீடியோ ஒன்று அஜித் ரசிகர்களுக்கே சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் பட விழாவில் பாலியல் சீண்டல்... தனுஷ் ரசிகரை ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த நடிகை- வீடியோ இதோ

ஏனெனில் அந்த வீடியோவில் நடிகர் அஜித், தன்னை வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரின் போனை வாங்கி அந்த வீடியோவை அவர் டெலிவுட் செய்துவிட்டு மறுபடியும் அந்த ரசிகரிடம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அஜித்தின் இந்த செயலுக்கு அஜித் ரசிகர்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அந்த சம்பவம் அருகில் இருந்த மற்றொரு ரசிகர் எடுத்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

நடிகர் இதுபோன்று ரசிகர்களிடம் கோபமாக நடந்துகொள்வது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித் வந்திருந்தபோது அவருடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் முயன்றார். அவரின் செல்போனை பிடுங்கிக்கொண்டு பின்னர் அந்த நபரை எச்சரித்து போனை திருப்பி வழங்கினார். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது துபாயிலும் அரங்கேறி இருக்கிறது.

Video ah எடுக்கிறா ??

அத குடு இங்க ...Deleted😂 pic.twitter.com/Ygwf28Z7q3

— Troll Cinema ( TC ) (@Troll_Cinema)

இதையும் படியுங்கள்... அதே டீம்... ஆனா இயக்குனர் மட்டும் வேற! மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து வெளிவந்த அறிவிப்பு

click me!