கேப்டன் மில்லர் பட விழாவில் பாலியல் சீண்டல்... தனுஷ் ரசிகரை ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த நடிகை- வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Jan 4, 2024, 11:24 AM IST

கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட தனுஷ் ரசிகரை நடிகை ஐஸ்வர்யா ரகுபதி ஓட ஓட விரட்டி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.


தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களும், கேப்டன் மில்லர் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இப்படத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி என்பவரும் ஒரு குட்டி ரோலில் நடித்திருப்பதால், அவருக்கு கேப்டன் மில்லர் பட விழாவில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் கும்பலாக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் அங்கு அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவுக்கு கூட்டத்தில் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா அந்த நபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ராசாவே உன்ன காணாத நெஞ்சு... கேப்டன் மறைவுக்கு பாட்டுப் பாடி அஞ்சலி செலுத்திய கேப்டன் மில்லர் தனுஷ்

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அவரை காலில் விழ சொல்லி கத்துகிறார் ஐஸ்வர்யா. இதையடுத்து காலில் விழுந்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்ற அந்த நபரை ஓட ஓட விரட்டி நடிகை ஐஸ்வர்யா ரகுபதி தர்ம அடி கொடுத்த காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரக்கு பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியபோது, அவருக்கு கூல் சுரேஷ் வலுக்கட்டாயமாக மாலை போட்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. மேடையிலே தன்னுடைய அதிருப்தியையும் ஐஸ்வர்யா வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து கூல் சுரேஷும் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

😨😨 pic.twitter.com/JJljl7ntBc

— Christopher Kanagaraj (@Chrissuccess)

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர் விமர்சனம் முதல் ஹேட்டர்ஸுக்கு பதிலடி வரை.... Pre Release-ல் தனுஷ் பேசிய ஹைலைட்டான விஷயங்கள்

click me!