விசுவாசம் படத்தில் அஜித்துடன் 2வது முறையாக இணையும் நாயகி... யார் தெரியுமா?

 
Published : Jan 18, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
விசுவாசம் படத்தில் அஜித்துடன் 2வது முறையாக இணையும் நாயகி... யார் தெரியுமா?

சுருக்கம்

ajith visuvasam movie heroin revelead

அஜித் தற்போது நான்காவது முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். திரைப் படத்தின் பெயரை வெளியிட எந்த ஒரு சஸ்பென்சும் வைக்காமல், படப்பிடிப்பு துவங்கும் முன்பே  படத்தின் பெயரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் படக் குழுவினர்.

இந்நிலையில் பலரது கேள்வியாக இருந்தது, இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் யார் என்பது தான். தற்போது இது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும் அனுஷ்கா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப் படுகிறது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவலையும் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே அனுஷ்கா, கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?