விஜய் ரசிகர்களை பதம் பார்க்கும் வைரஸ்... உஷார்...!

First Published Jan 18, 2018, 12:38 PM IST
Highlights
virus attacking vijay fans computers vijay


தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை உடையவர் இளைய தளபதி விஜய். இவரைப் பற்றி எந்த ஒரு தகவல் வெளிவந்தாலும் அதனை பிரபலமாக்கி விடுவார்கள்.

விஜய்க்கு விருது என்றால்... சொல்லவா வேண்டும் இவர்களுடைய அட்ராசிட்டியை.! அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் திரைப்படம் ஐரோப்பாவில் சிறந்த வெளிநாட்டு படங்களு க்கான, தேசிய விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேலும் சிறந்த துணை நடிகருக்கான பட்டியலில் விஜய் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதற்கான ஓட்டுப்பதிவு ஆன்லைனில் மும்முரமாக நடந்து வருகிறது.

விஜய் ரசிகர்களும் இந்த இணையதளத்திற்கு சென்று தங்களுடைய ஓட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதில் தான் இவர்களுக்கு ஆப்பும் காத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த இணையதளத்தை  திறந்தால், வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறதாம். 

இது பலரது கணினியை பதம் பார்த்து வருகிறது. சரியான ஆண்டிவைரஸ் மென்பொருள் இல்லாதவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கி அவர்களுடைய கணினியை செயலிழக்க வைத்து விடுகிறது இதனால் ரசிகர்களே உஷாராய் இருங்கள்..! 

click me!