
தெலுங்கு திரையுலகில் பாகுபலி புகழ் பிரபாஸும் அனுஷ்காவும் காதலர்களாகவே வலம் வந்தனர்.இருவரும் காதலர்கள் என்றும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என செய்திகள் தீயாய் பரவின. அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் கூட அனுஷ்காவின் பாகமதி ட்ரெய்லர் வெளியான போது பிரபாஸ், ஆல் தி பெஸ்ட் ஸ்வீட்டி என டிவிட்டியிருந்தார். மேலும் பாகுபலி, பாகுபலி2 படத்தில் இருவரும் இணைந்து நடித்ததற்காக ராசியான ஜோடி என பாராட்டப்பட்டனர்.
இந்நிலையில் திருமண வதந்திகளை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடைபெற்ற பாகமதி இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்கா தெரிவித்தார். அப்போது பேசிய அவர் , பிரபாஸ் தனது நண்பர் மட்டுமே என்றும் அவருடன் திருமணம் என்ற செய்தி முற்றிலும் பொய் என்றும் தெரிவித்தார்.
பிரபாஸுடன் காதல் மற்றும் திருமணம் என்று வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது திருமணம் குறித்து கூறிய போது, எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலும் உண்மை இல்லை. முதலில் நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால் உடனே திருமணம் தான். நண்பர்கள் ரசிகர்கள் எல்லோரையும் அழைத்து அவர்கள் வாழ்த்துகளுடன் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.