விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதால், நடிகர் அஜித் தற்போது வட மாநிலங்களில் பைக் ட்ரிப் செய்து வருகிறார். அதன் வீடியோ வைரலாகிறது.
நடிகர் அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் வில்லனாக ஆரவ் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் அங்கு ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் ஷூட்டிங்கை நடத்த முடியாமல் சென்னை திரும்பிய படக்குழு, அதன்பின்னர் இரண்டு மாதங்கள் ஆகியும் மீண்டும் படப்பிடிப்பை தொடங்காமல் இழுத்தடித்து வருகிறது. வழக்கமாக ஷூட்டிங் இல்லாத நேரங்களில் பைக் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ள அஜித், தற்போது கிடைத்துள்ள இந்த கேப்பிலும் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டார்.
இதையும் படியுங்கள்... Rajini : எலெக்ஷன் டைம் இது; அதனால மூச்சு விட கூட பயமா இருக்கு- மருத்துவமனை திறப்பு விழாவில் ரஜினி கலகல பேச்சு
மத்திய பிரதேசத்தில் பைக் ரைடிங் செய்து வரும் அஜித், தன்னுடன் நடிகர் ஆரவ்வையும் அழைத்து சென்றிருக்கிறார். ஆரவ் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். இருவரும் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது நெருங்கி பழகியதை அடுத்து அவரை தன்னுடன் பைக் ட்ரிப் அழைத்து சென்றிருக்கிறார் அஜித்குமார்.
சக ரைடருக்கு பைக் ஓட்டும் டிரிக்ஸை கற்றுக்கொடுக்கும் அஜித் pic.twitter.com/PIxG3DlaHr
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த பைக் ட்ரிப்பின் போது தன்னுடன் வந்த சக ரைடருக்கு பைக் ட்ரிக்ஸ் சிலவற்றையும் கற்றுக் கொடுத்து இருக்கிறார் அஜித். அப்போது எடுத்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, இன்றைய வகுப்பு என குறிப்பிட்டு அதனை பதிவிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பைக் ட்ரிப்பின் போது அஜித் கிளாசும் எடுக்கிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Dhanush : கமல் முன்னிலையில் பூஜையுடன் ஆரம்பமானது இளையராஜா பயோபிக்... இசைஞானியாக தனுஷ்; இசையமைக்கப்போவது இவரா?