
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு 25% முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்குவார் என கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் அஜித்துக்காக ஒரு கதையை தயார் நிலையில் வைத்துள்ளாராம். இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மாபெரும் பொருட்செலவில் தயாரிப்பார் எனவும் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் உண்மையா என்று தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.