மலேசியா கோல்டன் ஸ்க்ரீன்ஸ் சினிமாஸில் முதலிடத்தில் விஸ்வாசம்!! பிரான்ஸிலும் தல தான் மாஸ்...

By sathish kFirst Published Jan 17, 2019, 7:01 PM IST
Highlights

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படங்களின் வசூல் குறித்து ட்ராக்கர், சினிமா ரசிகர்கள் பல தகவல்களை வெளியிட்ட வசூல் பரிமாறப்பட்ட நிலையில் இந்த 2 படங்களின் உண்மையான வசூல் விபரங்கள் வெளிவந்துள்ளன. 
 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது. பேட்ட படத்தைக் காட்டிலும் தமிழகத்தில் விஸ்வாசத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் தாறுமாறான வரவேற்பு கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்தியுள்ளது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. தெலுங்கில் பாலகிருஷ்ணா, ராம சரண் வெங்கடேஷ் படங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோல இந்தியில் பேட்டயால் பெரிய வியாபாரம் செய்ய முடியாமல் போயுள்ளது. ஹிந்தியிலும்  சிம்பா, யூரி போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. 

விஸ்வாசம் படம் ஒரேயொரு மொழியில் வெளியாகி உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், மலேசியா கோல்டன் ஸ்க்ரீன்ஸ் சினிமாஸில் முதலிடத்தில் இருந்த பேட்டயை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முந்தியுள்ளது விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பிரான்ஸிலும் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளி முந்தியுள்ளது அஜித்தின் விஸ்வாசம்.  

click me!