தீவைப்பு, கத்திக்குத்து, கலவரம்... இது நியாயமா அஜித் சார்...!?

By Thiraviaraj RMFirst Published Jan 17, 2019, 2:55 PM IST
Highlights

அஜித்தை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர் பட்டாளம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை. ரசிகர்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் நடிகர்கள் அஜித்தை தவிர வேறு எவரும் இருக்க முடியாது. 

அஜித்தை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர் பட்டாளம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை. ரசிகர்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் நடிகர்கள் அஜித்தை தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

 

துக்கடா நடிகர்களே ரசிகர் மன்றத்தை ஆரம்பிக்கும்போது ரசிகர்கள் மீது கொண்ட நேசத்தால் தான் எந்த நடிகரும் செய்யத் துணியாத தனக்கிருந்த ஆயிரக்கானக்கான ரசிகர் மன்றங்களை துணிச்சலாக கலைத்தார் அஜித். முதலில் குடும்பத்தை பாருங்கள் எனக் கூறியப் அவர் பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர் மன்றம் கலைப்பு முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனாலும், அஜித்தை வெறித்தனமாக நேசித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். விஸ்வாசம் பட விஸ்வரூப வெற்றியால் கட்டுக்கடங்காத உற்சாகத்தில் மிதக்கிறார்கள் ரசிகர்கள். அவர்கள் சிலர் அஜித்தின் விஸ்வாசத்தில் ஆங்காங்கே சிதைத்துப் பார்த்திருக்கிறார்கள். 

விழுப்புரம், அருகே திருக்கோவிலூரில் விஸ்வாசம் திரையிடப்பட்ட திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அஜித் கட் அவுட் மீது ஏறி ஆறு பேர், பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். சில நிமிஷங்களில் கட் அவுட் தலைகீழாக சரிய, 5 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாவின் விழிம்பில் இருந்து மீண்டு வந்த அவர்களின் குடும்பம் பதை பதைத்திருக்காதா? அவர்களது பெற்றோர்களின் நிலை எப்படி இருக்கும். விஸ்வாசம் படத்தை பார்க்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற அப்பாவின் முகத்தில் தீ வைத்துக் கொழுத்தி இருக்கிறார் அந்த வெறியன். உயிருக்கு சேதமின்றி தப்பியிருக்கிறார் அந்தப் புண்ணியவானை பெற்ற தந்தை. அவரது உள்ளம் எத்தனை வதைத்திருக்கும்..? 

வேலூரில் தியேட்டருக்குள் இருக்கை பிடிக்கும் தகராறில் இருவருக்குள் நடந்த கத்திக்குத்தில் இரு இளைஞர்களுக்கும் படுகாயம். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் விநோதம் என்னவெனில் அவர்கள் இருவருமே அஜித் ரசிகர்கள். அவரது ரசிகர்களுக்குள்ளே மோதிக் கொண்டால், போட்டி நடிகர்களின் ரசிகர்களை சும்மா விட்டுவிடுவார்களா? பல இடங்களில் பங்காளிகளின் ரசிகர்களை நையப்புடைத்து இருக்கிறார்கள். உசிலம்பட்டி மாயாண்டி திரையரங்கிற்கு படம் பார்க்க தாங்கள் வளர்க்கும் காளைமாடுகளை தட்டி கூட்டி வந்ததெல்லாம் அட்ராசிட்டிகளின் உச்சம். மாடுகளை அனுமதிக்காததால் திரையரங்க உரிமையாளர்களிடம் தகராறு வேறு. மாடுகள் படம் பார்க்க தியேட்டர்கள் என்ன மாட்டுத்தொழுவமா..?
 
தியேட்டர்களில்தான் இந்த கூத்துகள் என்றால் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்கள் பதிவிடும் வார்த்தைகள் மூர்க்கத்தனம். சரி, இதெற்கெல்லாம் அஜித்தால் என்ன செய்ய முடியும்... இதற்கு அவர் என்ன செய்வார்? என்று கேட்டாலும், தடுக்க வேண்டிய கடமை அவருக்கும் இருக்கிறது. ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார்... அவரால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்கிறீர்களா?  ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளுக்கு அஜித் பொறுப்பில்லை என்றாலும், சில வழைமுறைகளை அவர் பின்பற்றி இருக்கலாம். ’இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். அமைதியாக செயல்படுங்கள் என ஒருசில வார்த்தைகளையாவது அவர் கூறியிருந்தால், கட்டுக்கடங்காத அவரது ரசிகர்கள் ஒருவேளை கட்டுப்பட்டிருக்கலாம். 

படத்தில் நடித்தோம்... அடுத்த படத்திற்கு தயாராவோம் என வழக்கம் அமைதியாக இருப்பது அஜித்தின் நற்பெயரில் ஆங்காங்கே கிழிசலை ஏற்படுத்தும்..! அங்காளி, பங்காளிகளை அடக்கி வையுங்க தூக்குதுர..! 

click me!