
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் இந்த இடத்தை பிடிக்க முக்கிய காரணம், இவருடைய கடின உழைப்பு என்றே கூறலாம்.
எவ்வளவு கடுமையாக கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றாற்போல் தன்னை உருக்கி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்.
குறிப்பாக... 'சேது' , 'ஐ' போன்ற படங்களுக்காக தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து நடித்தவர்.
தற்போது இவருடைய மகன், துருவும் 'வர்மா', படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆக உள்ளார். தெலுங்கில், மிகப்பெரிய ஹிட் அடித்த படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கில் தான் துருவ் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன், பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் சில தினங்களில் நிறைவு பெற்று சென்சாருக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில், விக்ரம் மகன் துருவ் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அதில் தன்னுடைய உடல் எடையை ஏற்றி கட்டு கோப்பாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகினரும் வியந்து வருகிறார்கள். சிலர் "அப்பா 8 அடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்ந்து விட்டார், என பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.