
பொதுவெளியிலிருந்து எவ்வளவுதான் அஜீத் ஒதுங்கியிருந்தாலும் அவர் குறித்த சின்னச்சின்ன செய்திகள் கூட யார் மூலமாவது ரிலீசாகிவிடுகின்றன. அந்த வகையில் அவர் மாடல் செல்போனை பயன்படுத்துகிறார். என்ன வீடியோக்களை ரசித்துப்பார்க்கிறார் என்ற செய்திகளை நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார்.
’விஸ்வாசம்’ படத்தில் நடிகர் அஜித்துடன்இணைந்து நடித்திருப்பவர் ஜாங்கிரி மதுமிதா . நகைச்சுவை நடிகையான அவர் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் எப்படி இருப்பார் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அஜித் படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார் என மதுமிதா கூறினார். அதே சமயம் எப்போதும் தனதுமகள் மற்றும் மகன்குறித்து அஜித் மனம் திறந்து பேசக்கூடியவர் என்றும் மதுமிதா தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள செல்போனில் தனது மகன் ஆத்விக்கின் வீடியோவை அவ்வப்போது பார்த்து ரசிப்பார் அஜித் என்றும் மதுமிதா கூறியுள்ளார்.
அப்போது மதுமிதாவிடம் அஜித் என்ன செல்போன் பயன்படுத்துகிறார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அஜித், தான் மற்றவர்களுடன் பேசுவதற்கு சாதாரணமான செல்போன் ஒன்று வைத்திருப்பதாக மதுமிதா கூறினார். அந்த போனை பார்க்க லேட்டஸ்ட் மாடல் போல் இல்லை என்று அவர் தெரிவித்தார். ஆனால் தனது மகன் வீடியோவை பார்க்க அஜித் புதிய செல்போன் ஒன்றை வைத்துள்ளதாகவும் அது ஐபோனாக இருக்கலாம் என்றும் மதுமிதா கூறியுள்ளார்.
மேலும் அஜித்தின் மகன் ஆத்விக் வேட்டி கட்டிக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று இருப்பதாகவும், அதைத்தான் அஜித் அவ்வப்போது பார்த்து ரசிப்பார் என்றும் மதுமிதா தெரிவித்துள்ளார். அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஒரு போதும் தான் மறக்க முடியாது என்றும் மதுமிதா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.