காதலனுடன் ஜோடி போடும் ஜூலி!

By manimegalai aFirst Published Dec 20, 2018, 1:19 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது அரசியல் தலைவர்களை பற்றி சர்ச்சைக்குரிய முழக்கங்களை எழுப்பி மிகவும் பிரபலமானவர் ஜூலி. 
 

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது அரசியல் தலைவர்களை பற்றி சர்ச்சைக்குரிய முழக்கங்களை எழுப்பி மிகவும் பிரபலமானவர் ஜூலி. 

இதனால் இவரை வீர தமிழச்சி என அனைவரும் புகழ, அனைத்து மீடியாக்களின் பார்வையும் இவர் மேல் விழுந்தது. இதனால் கிடைத்த நற்பெயரை பயன்படுத்தி, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார்.

ஆரம்பத்தில் அதிகமாக எதிரிப்பார்க்கப்பட்ட நபராக இவர் இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதம்,  இவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.  நெகட்டிவ் இமேஜோடு, வெளியே வந்த இவருக்கு முதல் முதலில் டான்ஸ் மாஸ்டர் கலா அவருடைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை கொடுத்தார். 

இதைத்தொடர்ந்து படங்களிலும் நடிக்க தொடங்கினார் ஜூலி.  அந்த வகையில் ஏற்கனவே 'அம்மன் தாயி' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜூலி. விரைவில் இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து ஜூலி நடிப்பதாக கூறப்பட்ட 'அனிதா எம்.பி.பி.எஸ்' திரைப்படத்தில் இவர் நடிக்க கூடாது என, அனிதாவின் அப்பா கண்டனம் தெரிதித்துள்ளதால் இந்த படத்தின் வேலைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக, நடிக்க உள்ள படத்தை பற்றி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜூலி.  இந்த படத்தில் ஜூலியின் காதலன் மார்கம்ரான், கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை எழில் துரை என்பவர் இயக்க உள்ளதாகவும் தெரிவித்து பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

 

 

My new project staring directed by Ezhil Durai pic.twitter.com/DavT7BH3uN

— maria juliana (@lianajohn28)

click me!