
'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது, 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் பிஸியாகியுள்ளார் அஜித். ஏற்கனவே படத்தின் பூஜை போடப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோர் தங்களுடைய அரசியல் வருகையயை உறுதி செய்து. அதற்கான ஆயத்த பணிகளில் முழுமையாக ஈடபட்டு வருகிறார்கள். மேலும் அடுத்ததாக நடிகர் விஜய்யும் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் அரசியல் பற்றி பேசி வருவதால் இவரும் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவரை தொடர்ந்து சிலர் அஜித்தின் அரசுடக் வருகை குறித்து சில வந்தந்திகளை பரப்பி வந்தனர். அதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் இவர் கூறியுள்ளது... "அரசியலுக்கு வரும் எண்ணமில்லை தனக்கு இல்லை. சினிமாவில் நடிப்பது மட்டுமே என் தொழில். அரசியல் வேண்டாம் என்பதற்காக தான் ரசிகர் மன்றங்களை கலைத்தேன். அரசியலை பொறுத்தவரை தன்னுடைய உச்சபட்ச அரசியல் தொடர்பு தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுவது மட்டுமே என தெளிவாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.