
யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, நிர்வ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.கடந்த அக்டோபர் மாதமே பூஜை போடப்பட்ட 'வலிமை' படத்தின் ஷுட்டிங், கடந்த வாரம்தான் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது.
'நேர்கொண்ட பார்வை' படம் ரீமேக் கதை என்பதால், தனது சொந்தக் கதையுடன் உருவாகும் 'வலிமை' படத்தை ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு பல ஆக்ஷன் காட்சிகளுடன் மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் ஹெச்.வினோத்.
அதற்கு ஏற்றாற்போல், வலிமை ஷுட்டிங்கை ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கி படமாக்கி வருகிறாராம். இதில், ஸ்டைலான மீசையுடன் நியூ லுக்கில் அஜித் நடித்து வருகிறாராம். அவருடன் நடிகர் போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதனால், காட்சிகள் மற்றும் அஜித்தின் லுக் லீக் ஆவதைத் தடுக்க, படப்பிடிப்பு தளத்துக்குள் செல்ஃபோன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாம்.
ஒருபக்கம் வலிமை ஷுட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தாலும், மறுபக்கம் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
தற்போதைய தகவலின்படி, ஹீரோயின் ரேஸில் பாலிவுட் நடிகைகள் யாமி கவுதம் மற்றும் இலியானா ஆகியோர் போட்டிப்போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், யாமி கவுதம் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில், வலிமை படத்தின் ஹீரோயின் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.