விவசாயிகளுக்கு உதவிகள் செய்த அஜித்.... உண்மையா..... வெளிவந்த தகவல்....!!!

 
Published : Jan 05, 2017, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
விவசாயிகளுக்கு உதவிகள் செய்த அஜித்.... உண்மையா..... வெளிவந்த தகவல்....!!!

சுருக்கம்

நடிகர் அஜித் உதவும்  குணம், எப்படி பட்டது  என்பது அவருடன் பணியாற்றுவார்கள், பழகியவர்கள் என  அனைவரும் அறிந்தது அதே போல் வெளியில் தெரியாமல் பல வழிகளில் அஜித் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக  கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து பெரும் நஷடத்தை அடைந்து வருகின்றனர்.

சிலர் கடன் வாங்கி விதைத்த பயிர் வாடிய சோகம் தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு  மரணம் அடைந்தனர். மேலும் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையும் நடக்கின்றது. 

இந்நிலையில் அஜித் விவசாயிகளுக்கு நஷ்டஈடு தருவதாக ஓர் செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவ ஆரமித்தது.

அஜித்தின் இந்த நடவடிக்கைக்கு நன்றி என இயக்குனர் மனோபாலா தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இத்தகவல் மிக வேகமாக பரவியதால் இது குறித்து அஜித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் ஒருவர் இது உண்மையற்ற செய்தி என்பதை வெளிப்படுத்தினார். ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்த மனோபாலா இதற்கு ரீட்வீட் செய்து இப்போது தான் பதிவிட்டிருந்த ட்வீட்டையும் நீக்கம்  செய்துள்ளார். இதனால் அந்த தகவல் வதந்தி என சொல்லப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ