பிறந்தநாளில் தல அஜித் ரசிகர்களுக்கு கொடுக்கும் சர்பிரைஸ் கிப்ட் இதுவா?

By manimegalai aFirst Published Apr 12, 2019, 11:51 AM IST
Highlights

 தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படம் அவரின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என,  படம் துவங்கும் போது கூறப்பட்டது.
 

தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படம் அவரின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என,  படம் துவங்கும் போது கூறப்பட்டது.

பின் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்தனர். 

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது. இயக்குனர் வினோத் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கி காட்ட வேண்டும் என தூக்கத்தை தொலைத்து தன்னுடைய முழு கவனத்தையும் இந்த படத்தின் மீது செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித் பிறந்த நாளான மே 1 , ஒன்றாம் தேதி... 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டீசர் வெளியாகுமா? என ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்குந்தாலும், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, அஜித் தன்னுடைய பிறந்த நாள் அன்று அவருடைய 60 வது படம் குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.

அஜித் படத்தை அடுத்ததாக இயக்க உள்ள, இயக்குனர்கள் பட்டியலில் வெங்கட்பிரபு, வினோத், சிவா, என பலரது பெயர் கூறப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் 60 ஆவது படத்தை இயக்க உள்ளது யார் என விரைவில் தெரியவரும். 

click me!