திருமணத்தை வெளியே சொல்லவில்லை...ஆனால் 2 வருடங்களாக ஹனிமூன் நடக்கிறது என்கிறார் முன்னணி தமிழ்நடிகை...

Published : Apr 12, 2019, 11:09 AM IST
திருமணத்தை வெளியே சொல்லவில்லை...ஆனால் 2 வருடங்களாக ஹனிமூன் நடக்கிறது என்கிறார் முன்னணி தமிழ்நடிகை...

சுருக்கம்

டென்னிஸ் வீரர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை மேக்னா நாயுடு அதை இரண்டு வருடங்களுக்குப் பிறகு பகிரங்கப்படுத்திருக்கிறார். ‘என் அப்பா டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலமாக லூயிஸ் அறிமுகமானார். அவர் என்னை விட பத்து வயது அதிகமானவர். சமூக வலைத் தளம் மூலமாக எங்கள் நட்புத் தொடர்ந்தது. பின் அது காதலாக மாறியது' என்று தன் காதல் மலர்ந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

டென்னிஸ் வீரர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை மேக்னா நாயுடு அதை இரண்டு வருடங்களுக்குப் பிறகு பகிரங்கப்படுத்திருக்கிறார். ‘என் அப்பா டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலமாக லூயிஸ் அறிமுகமானார். அவர் என்னை விட பத்து வயது அதிகமானவர். சமூக வலைத் தளம் மூலமாக எங்கள் நட்புத் தொடர்ந்தது. பின் அது காதலாக மாறியது' என்று தன் காதல் மலர்ந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழில் சிம்பு நடித்த ’சரவணா’, சரத்குமார் நடித்த ’வைத்தீஸ்வரன்’, ’வாடா’ உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை மேக்னா நாயுடு. தனு ஷின், குட்டி, கார்த்தியின் சிறுத்தை உட்பட சில படங்களில் குத்துப் பாடலுக்கு ஆடியும் உள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த திருமணம் இரண்டு வருடத்துக்கு
முன்பு நடந்துள்ளது.

அந்த திருமணத்தை இரண்டு வருடங்களாக மறைத்தது ஏன் என்பது குறித்துப் பேசிய அவர்,” போர்ச்சுக்கீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகுவல் ரீஸ் (Luis Miguel Reis) என்பவரை காதலித்து வந்தேன். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டோம். பிறகு குடும்ப வாழ்க்கையை கவனிக்கத் தொடங்கிவிட்டேன். எளிமையாக, கவனிக்கப்படாமல் என் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். பிரமாண்டமாக நடத்தப்படும் திருமண விழாவில் எனக்கு விருப்பம் இல்லை. அதன்படியே எளிமையாக என் திருமணம் நடந்தது. இது என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியும்.

சமீபத்தில் என் கணவரிடம் , இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்று கேட்டபோது ‘இவ்வளவு நாட்களாய் அப்படி அறிவிக்காமல் இருக்க எது தடுத்தது என்பது தெரியவில்லை.உடனே செய்’என்றார். இதையடுத்துதான்  இப்போதுதெரியப்படுத்துகிறேன். நான் எனது அம்மாவின் பிறந்த நாளன்று திருமணம் செய்துகொண்டேன். என் அம்மாவிடம், பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார் லூயிஸ். உங்கள் திருமணம் தான் என்று சொன்னார் அம்மா. உடனடியாக, இந்து முறைப்படி மும்பையில் எங்கள் திருமணம் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும். எங்கள் ஹனிமூன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்று கண்ணடிக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!