
அட்லி மீது தென்னிந்தியாவின் பிரபல இயக்குநர்களுக்கு கூட சிறு பொறாமை உண்டு. காரணம்?...துணை இயக்குநர் வாய்ப்பு தேடி அலையும் வயதில் இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, மூன்றாவதாகவும் ஒரு மெகா ப்ராஜெக்டை முடித்திருக்கிறாரே! என்பதுதான்.
முதல் படத்தில் நயன்தாரா! எனும் பெரிய ஆளுமையையே கமிட் செய்து கலக்கி எடுத்திருந்தார். முதல் படம் மாஸ் விசிட்டிங் கார்டாய் அமைய ரெண்டாவது படமே (இளைய) தளபதியோடு அமைந்தது. அதுவும் தெறி ஹிட்டடிக்க, மூன்றாவது படமும் விஜய்யோடு அமைந்திருக்கிறது.
இதனால் அட்லியின் மார்கெட்டும், சம்பளமும் எகிறி நிற்கும் நிலையில் செம்ம உற்சாகத்திலிருந்த அட்லீயை சமீபத்திய மீம்ஸ்கள் சில இட்லியாக சுட வைத்திருக்கின்றன.
அதென்ன விமர்சனம்?...அஜித் படம் வெளியாகையில் விஜய்யின் ரசிகர்கள் தல_யை கலாய்ப்பதும், விஜய் படம் வெளியாகையில் அஜித்தின் ரசிகர்கள் தளபதியை கலாய்ப்பதும் பல்லாண்டு காலமாக தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து வரும் கேடு கெட்ட வழக்கம். சமீபத்தில் கூட விவேகம் ரிலீஸுக்கு முன் அஜித்தை வெச்சு செய்தனர் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீஸாக போகிறது. ஆக அஜித் ரசிகர்களின் டர்ன் வந்திருக்கிறது. அவர்களும் பதிலுக்கு விஜய்யை வெச்சு செய்வார்கள் என்று பார்த்தால்...அவர்களோ அட்லி மீது பாய்ந்து கலாய்த்திருக்கிறார்கள்.
அதுவும் அட்லி நொந்து நூடுல்ஸ் ஆகுமளவுக்கு அவரது கிரியேட்டிவிட்டியை கிண்டி கிளறி கூறு போட்டிருப்பதுதான் இதில் மேட்டரே. அப்படி அதில் என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா?...
அட்லியின் முதல் படமான ராஜா ராணி ‘மெளன ராகம் ‘ படத்தின் ரீமேக் என்றும், இரண்டாவது படமான தெறி விஜயகாந்தின் ’சத்ரியன்’ படத்தின் ரீமேக் என்றும் ரிலீஸான படங்களை கலாய்த்தவர்கள் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் விஜய்யின் மெர்சல் படத்தை அதே விஜயகாந்தின் ‘பேரரசு’ படத்தின் காப்பி என்றும் கலாய்த்திருக்கிறார்கள்.
சுந்தர் சி.யை வைத்து ஆயுதம் செய்வோம் படம் இயக்கிய இயக்குநர் உதயனின் முந்தைய படம்தான் கேப்டனின் பேரரசு படம். இதில் சரத்பாபுவின் இரு மகன்களாக விஜயகாந்த் டுயல் ரோல் செய்திருப்பார். ஒரு ரோல் ஹீரோவாகவும், இன்னொரு ரோல் கிட்டத்தட்ட எதிர்மறை ஹீரோ போலும் இருக்கும்.
ஓரளவுக்கு வெற்றி பெற்ற இந்த படத்தின் காப்பிதான் மெர்சல் என்று அட்லியை போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். ஆன் தி வேயில் ‘ஒரு காலத்துல மகேஷ் பாபுவோட தெலுங்கு ஹிட்களின் ரீ மேக்குகளில் நடிச்சு பொழப்ப ஓட்டுன விஜய் இப்போ தமிழ்ல ஹிட்டான பழைய படங்களோட ரீமேக்குலேயே நடிக்க துவங்கிட்டாரு.
ஹய்யோ ஹய்யோ! இப்படி பழைய இயக்குநரோட சொந்த கிரியேட்டிவிட்டிய காப்பியடிச்சு எடுக்கப்படும் படத்தில் நடிக்கிறதுக்கு பதிலா பேசாம வீட்டுல உட்காரலாம்.’ என்று விஜய்க்கும் அட்வைஸியிருக்கின்றனர்.
இதில் அட்லீ ஓவர் ஃபீலிங்கில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.