விவேகம் படத்தை பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர் உயிரிழந்ததால் பரபரப்பு…

 
Published : Aug 26, 2017, 10:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
விவேகம் படத்தை பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர் உயிரிழந்ததால் பரபரப்பு…

சுருக்கம்

Ajith Fan who was watching the vivegam movie was died

காரைக்காலில் விவேகம் படத்தை பார்த்துக் கொண்டிருந்த தல அஜித் ரசிகர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்ததால் அப்பகுதி பெரும் பரபரப்பானது.

நாகப்பட்டிணம் மாவட்டம் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபுருதீன் (31). வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அஜித் நடிப்பில் உருவான விவேகம் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானதால் அதனைப் பார்க்க சபுருதீன், அவரது நண்பர்களுடன் காரைக்காலில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்றுள்ளார்.

அப்போது விவேகம் படத்தை பார்த்துக் கொண்டிருந்த சபுரூதினுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதில் நிலை தடுமாறி அங்கேயே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது கணவர் இறந்த செய்தி அறிந்த ஆலம் முனிராபேகம், காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவலாளர்கல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!