
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோ அனைவரையும் குழப்புவது போல் அமைந்துள்ளது... ஆரம்பத்திலேயே கணேஷ் நீங்கள் கொலை செய்யப்பட்டு விட்டீர்கள் என பிக் பாஸ் குரல் தெரிவிக்கிறது. இதற்கு கணேஷ் எப்படி கொன்றார்கள் என காண்பித்தால் நன்றாக இருக்கும் என்பது போல் கூறுகிறார்.
உடனே பிக் பாஸ் குரல், தந்திரமாக செயல் படும் கொலையாளி ஒருவர் போட்டியாளர்களில் உள்ளார் என்பதை எடுத்துக்கூறும் விதமாக ஹரீஷ் கல்யானை காட்டுகின்றனர்.
புரியாமல் தவித்த கணேஷிடம் இனி நீங்கள் இந்த வீட்டிற்குள் வர கூடாது என பிக் பாஸ் குரல் அறிவுறுத்துகிறது. மேலும் அவர் ஒரு மரத்தின் கிழே வெள்ளை துணியை போற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது போலவும் காட்டப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆரவிற்கு போன் மூலம் ஒரு அழைப்பு வந்து ஆரவ் அடுத்த டார்கெட் நீங்கள் தான் என்றும் கூறுகிறது... அதே சமயம் ஹரீஷ் வில்லன் போன்று காட்ட படுகிறார். உண்மையில் யார் அந்த கொலையாளி.... பொறுத்திருந்து பார்ப்போம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.