தல பிறந்தநாளில் அமர்க்களமாக வரும்..."அஜித் ஷாலினி"...

 
Published : Apr 07, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
தல பிறந்தநாளில் அமர்க்களமாக வரும்..."அஜித் ஷாலினி"...

சுருக்கம்

ajith birthday relese amarkalam movie

தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். 

ஒவ்வொரு தல பிறந்த நாளின் போதும், பல்வேறு சமூக சேவைகள் செய்தும் தங்களுடைய பாசத்தை நல்லவிதத்தில் வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் பிறந்த நாள் அன்று ரசிகர்களை மேலும் உற்சாக படுத்த அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று தமிழகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் மே 1ஆம் தேதி அஜித், ஷாலினி நடித்த 'அமர்க்களம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், ஷாலினி வாழ்க்கையில் இணைய காரணமான இந்த படத்தை சரண்  இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் ரகுவரன், ராதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையில் உருவாகியிருந்த இந்த படம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!