அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டையால் பிஸியாகியிருக்கிறது ஆன்லைன் உலகம்..
தமிழக தியேட்டர்கள் முதல் லாக்டவுனில் நூறு நாட்களை தாண்டி மூடப்பட்டன. திறக்கப்பட்டதும் அவர்களுக்கு கை கொடுத்தது விஜய்யின் ‘மாஸ்டர்’. அதனால் விஜய்யை கையெடுத்து கும்பிட்டனர் தியேட்டர் ஓனர்கள். இப்போது இரண்டாவது லாக்டவுனுக்குப் பின் மீண்டும் தியேட்டர்கள் டல்லடித்து கிடக்கின்றன. ஓப்பன் பண்ணியும் ஒரு ஹிட்டும் இல்லாத நிலையில், பிப்ரவரி 24ல் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’யைதான் பெரிய அளவில் நம்பி காத்திருக்கின்றனர். வசூல் மன்னனாக அஜித் தங்களை காப்பாற்றுவார் என்பது அவர்களின் எண்ணம்.
ஏஸியா நெட் தமிழ் இணைய தளம் முதலிலேயே குறிப்பிட்டது போல், இன்றைய தேதிக்கு தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய ஐகானாக மாறி நிற்கிறார் இயக்குநர் கம் நடிகரான எஸ்.ஜே.சூர்யா. வில்லன், ப்ரைம் ரோல் என்று அவரை விரட்டி விரட்டி கால்சீட் கேட்கிறார்கள். அவர் இருந்தால் படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் என்று பல முன்னணி இயக்குநர்கள் நம்பிட துவங்கிட்டாங்க.
விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது! என்பது தெரிந்த சேதி. அந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார் என்பதும் தெரிந்த சேதி. அதை ‘அரபிக் குத்து வகை பாடல்’ என ப்ரமோட் செய்கிறது அந்த டீம்! என்பதும் தெரிந்த சேதி. ஆனால், இந்த வகைப் பாடல் ஏற்கனவே கார்த்திக், ரம்பா கலக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தின் பாடலிலேயே வந்துவிட்டது! என்றும் எனவே பீஸ்ட் டீம் வேஸ்டாக ஸீன் போட வேண்டாம்! என்றும் இணையத்தில் வறுக்கின்றனர். மேலும் மலையாள ம்யூஸீக் ஆல்பம் பாடல் உட்பட பல பாடல்களை ஒப்பிட்டு காப்பியடித்து போடப்பட்டதுதான் பீஸ்ட் அரபிக் குத்து என்று வைரலாக்கி வருகின்றனர்.
பீஸ்ட் சிங்கிளின் மாஸ் ப்ரமோஷனை வேண்டுமென்றே அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வதாக விமர்சனம் கிளப்புகின்றனர் விஜய் ரசிகர்கள். காரணம், அஜித்தின் வலிமை ரிலீஸ் வைபரேஷனை குறைக்கவே விஜய், தனது பட ஃபர்ஸ்ட் சிங்கிளை இப்போது வெளியிடுகிறார் என்பது அஜித் ரசிகர்களின் ஆதங்கம்.
( ஆக ஒருத்தரும் உழைப்பு, உயர்வு பத்தி யோசிக்கல)
தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் படங்களை எடுக்கும் இயக்குநர்களுக்கு சிரஞ்சீவியை இயக்கும் ஆசை கண்டிப்பாக வரும். காரணம், தென்னிந்திய ஆக்ஷன் ஹீரோக்களில் அவர் மிக முக்கியமானவர். இந்நிலையில், தமிழ் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் சிரஞ்சீவியின் மகன் ராம்சர்ணை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிரஞ்சீவியை தூக்கி சாப்பிடுவது போல் நடிக்கிறாராம். இதை சிரஞ்சீவிக்கே போன் போட்டு ஷங்கர் சொல்லியதாக ராம்சரண் பகிர்ந்துள்ளார்.
(அது கிடக்கட்டும் ஷங்கர் சார், ஆனா சிரஞ்சீவி இப்பவும் ராம்சரணை தூக்கி சாப்பிடுற மாதிரி காதல் காட்சியில் நடிக்கிறாரே! இதை யார்ட்ட சொல்ல?)
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.