
அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
இந்நிலையில், பஞ்சாப்பின் மோகா பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் சோனு சூட். பஞ்சாபின் மோகா-பதிந்தா சாலையில் நேற்று நள்ளிரவு கார் விபத்து நிகழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர் காரில் சிக்கிக் கொண்டார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற சோனு சூட். விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டார்.
பின்னர் மீட்கப்பட்ட அந்த இளைஞரை தனது காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞரை, சோனு சூட் சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர்பிழைத்துள்ளார். விபத்து சமயத்தில் சோனு சூட் களத்தில் இறங்கி மீட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.