VidaaMuyarchi: யங் லுக்கில் த்ரிஷாவோடு இருக்கும் அஜித்.. ஹாப்பி மோடில் வெளியான 'விடாமுயற்சி' மூன்றாவது லுக்!

Published : Jul 19, 2024, 06:10 PM ISTUpdated : Jul 19, 2024, 07:31 PM IST
VidaaMuyarchi: யங் லுக்கில் த்ரிஷாவோடு இருக்கும் அஜித்.. ஹாப்பி மோடில் வெளியான 'விடாமுயற்சி' மூன்றாவது லுக்!

சுருக்கம்

'விடாமுயற்சி' திரைப்படத்தில் இருந்து, சற்று முன் அஜித் மற்றும் த்ரிஷா இடம்பெற்றுள்ள மூன்றாவது லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ள, 'விடாமுயற்சி' திரைப்படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக், மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளியாகி உள்ள நிலையில், தற்போது த்ரிஷாவுடன் அஜித் இடம்பெற்றுள்ள மூன்றாவது லுக்கை படக்குழு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவான 'துணிவு' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தன்னுடைய 62-ஆவது படத்தில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில்  தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்ற நிலையில், விக்னேஷ் சிவன் கூறிய கதை தல அஜித்துக்கும், இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காததால் அதிரடியாக விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து படக்குழு வெளியேற்றியது.

Dhanush Movie: 'ராயன்' மட்டும் இல்ல.. தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கார்த்திருக்கும் டபுள் ட்ரீட்!

பின்னர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியானது. இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தாலும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு வருவது தான், படத்தின் பணிகள் தாமதமாவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அமலா கர்ப்பமாக இருந்தபோது... ஆசையாக கார்த்திருந்த நாகார்ஜுனாவுக்கு அமெரிக்க டாக்டரால் நேர்ந்த ஏமாற்றம்!

கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் அஜித், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பையான்  சென்றபோது, அவருடைய மனைவி ஷாலினிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக இரண்டே நாட்களில் சென்னைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு முன்பே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் இணைந்துள்ள அஜித், இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் தற்போது தன்னுடைய மனைவிக்காக, அனைத்து பட பணிகளையும் ஓரம் கட்டி விட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் இருந்து பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்.. தற்போது மூன்றாவது லுக்கை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

இதில் அஜித் மிகவும் இளமையாக இருக்கிறார். திரிஷா புன்னகை பூவாக சிரிக்க இருவரும் செம்ம ஹாப்பி மோடில் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியிட பட குழு முடிவு செய்துள்ள நிலையில், குட் பேட் அக்லி படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!