Dhanush Movie: 'ராயன்' மட்டும் இல்ல.. தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கார்த்திருக்கும் டபுள் ட்ரீட்!

Published : Jul 19, 2024, 05:33 PM IST
Dhanush Movie: 'ராயன்' மட்டும் இல்ல.. தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கார்த்திருக்கும் டபுள் ட்ரீட்!

சுருக்கம்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'ராயன்' திரைப்படம் வெளியாக உள்ளது மட்டும் இன்றி, தனுஷின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்து - இயக்கியுள்ள 50-வது திரைப்படமான 'ராயன்' படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'புதுப்பேட்டை'  ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என பெயர் எடுத்தவர் தனுஷ். ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்வு செய்து நடிக்க விரும்பாத தனுஷ், தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி வருகிறார். மேலும் தென்னிந்திய திரை உலகத்தை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் போன்றவற்றிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ், தன்னுடைய 50-ஆவது படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

'ராயன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சரவணன், பிரகாஷ்ராஜ், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அமலா கர்ப்பமாக இருந்தபோது... ஆசையாக கார்த்திருந்த நாகார்ஜுனாவுக்கு அமெரிக்க டாக்டரால் நேர்ந்த ஏமாற்றம்!

இதற்கான புரமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், 'ராயன்' திரைப்படம் வெளியாகும் அதே நாளில், தனுஷ் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த, புதுப்பேட்டை திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

Tishaa Death: மனதை உலுக்கும் சோகம்... 20 வயதே ஆகும் பிரபல முன்னணி தயாரிப்பாளரின் மகள் அதிர்ச்சி மரணம்!

'புதுப்பேட்டை 2' படத்தின் பணிகள் எப்போது துவங்கும் என ஆவலோடு இருக்கும் ரசிகர்களுக்கு, தனுஷின் புதுப்பேட்டை ரீ ரிலீஸ் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டாராக நடித்து மிரட்டு இருப்பார்.  மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், இப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் என இருவர் நடித்திருப்பார்கள். அதேபோல் விஜய் சேதுபதியும் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் செய்யப்படுவது அவரது ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட்டாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!