- Home
- Gallery
- Tishaa Death: மனதை உலுக்கும் சோகம்... 20 வயதே ஆகும் பிரபல முன்னணி தயாரிப்பாளரின் மகள் அதிர்ச்சி மரணம்!
Tishaa Death: மனதை உலுக்கும் சோகம்... 20 வயதே ஆகும் பிரபல முன்னணி தயாரிப்பாளரின் மகள் அதிர்ச்சி மரணம்!
'அனிமல்' உட்பட பல படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்துள்ள, டி-சீரிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கிரிஷன் குமாரின் மகள் திஷா 21 வயதில், புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி-சீரிஸ் என்கிற முன்னணி தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான பாலிவுட் படங்களை தயாரித்துள்ளவர், தயாரிப்பாளரும், நடிகருமான கிரிஷன் குமார். இவர் அனிமல், ஸ்ரீகாந்த், போர், ஆதிபுருஷ், சர்க்கஸ், திரிஷ்யம் 2, போன்ற 70-க்கும் மேற்பட்ட படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
இந்த நிறுவனத்தை நிறுவியது, குஷால் குமார், பின்னர் இவரது குடும்பத்தை சேர்ந்த பூஷன் குமார், கிரிஷன் குமார் ஆகியோரும் இந்த நிறுவனத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்கள். டி-சீரிஸ் நிறுவனம் தன்னுடைய யூ டியூப் மூலம் ஏராளமான ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்கள், ட்ரைலர் போன்றவற்றின் உரிமையை பெற்று வெளியிட்டும் வருகிறது.
Top 10 Serial TRP: சன் டிவி சீரியல்களை TRP-யால் அலறவிடம்... விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' தொடர்!
இந்த பிரபல நிறுவனத்தின் இணை உரிமையாளரான, கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார் கடந்த சில வருடங்களாகவே தீவிர புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஜெர்மனியில் திஷா உயர்தர சிகிச்சை பெற்றுவந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திஷா கடைசியாக அனிமல் பட விழாவில் காணப்பட்டார். அதன் பின்னர் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திஷா குமார் 21 வயதிலேயே, புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தொடர்ந்து, திஷாவின் மரணத்திற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.