
நடிகர் சங்கம் சார்பாக நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சத்யராஜ் , விக்ரம் , ஜெயம் ரவி, போன்ற பல முன்னனி தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் பீட்டாவிற்க்கு ஆதரவு தெரிவித்து பல தமிழ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான நாயகி திரிஷாவும் பங்கு பெற்றார்.
இந்த போராட்டத்திற்கு தனது மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்துடன், நீண்ட நேரம் பேசினார் திரிஷா, தற்போது அவர் அஜித்துடன் பேசிய தகவல்கள் கசிந்துள்ளது.
அஜித் திரிஷாவை, நீங்கள் பீட்டாவிற்கு கொடுக்கும் ஆதரவை விட்டு விடுங்கள் என்றும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் பற்றியும் முழுமையாக விலகினாராம், அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்ட திரிஷா இனி என் முழு ஆதரவு ஜல்லிக்கட்டுக்குத்தான் என கூறியுள்ளாராம்.
மேலும் நான் ஒரு தமிழ் பெண்ணாக இருந்து கொண்டு இத்தனை நாட்கள் பீட்டாவிற்கு ஆதரவு கொடுத்ததற்கு வருத்த படுவதாக அஜித்திடம் திரிஷா கூறியுள்ளதாக கூறபடுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.